பெட்ரோல், டீசல் விலை ரூ.8 உயர்வு.. ராகுல் காந்தி கண்டனம்

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தவணை முறையில் ரூ.8 வரை உயர்த்தப்பட்டதற்கு நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், வரவிருக்கும் பொருளாதாரப் புயல் குறித்து தாம் பல மாதங்களாக எச்சரித்து வருவதாகவும், தேர்தல் சமயத்தில் வெற்று வாக்குறுதிகளை அளிக்கும் பிரதமர் மோடி, தேர்தல் முடிந்தவுடன் மக்களின் பாக்கெட்டுகளைப் பறிப்பதையே வழக்கமாகக் கொண்டு "இன்பிளேஷன் மேன்" போல் செயல் படுகிறார் என்றும் விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி