பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு விலை உயர்வால் பால், காய்கறிகள், பழங்கள் மற்றும் மளிகை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பதால் ஆன்லைன் டெலிவரி கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளது. மேலும், ஆட்டோ, வாடகை வாகனங்கள் மற்றும் பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கக்கூடும் என்பதால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.