கடலை மிட்டாய்க்கு ஜி.எஸ்.டி விலக்கு.. மத்திய அமைச்சரிடம் துரை வைகோ கோரிக்கை

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போரால் கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்தொழிலை பாதுகாக்க ஜி.எஸ்.டி. வரி விலக்கு அளிக்க வேண்டும் என துரை வைகோ எம்.பி. மத்திய அமைச்சரிடம் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான பொருட்கள் தேக்கமடைந்துள்ளதால், அவற்றை 'மதிய உணவு திட்டத்தின்' கீழ் கொள்முதல் செய்யவும், 20,000 தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்தி