உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு தடை கோரிய மனு வாபஸ்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர்கள் நியமனத்துக்கு தடை விதிக்க கோரி பாஜக நிர்வாகி கரு.நாகராஜன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, அதனை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. விசாரணையின் போது, பணி நியமனம் தொடர்பான விவகாரத்தை பொதுநல வழக்காக எப்படி விசாரணைக்கு ஏற்க முடியும் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தேர்வு நடைமுறையை எதிர்த்து தேர்வர்கள் வழக்கு தொடராததால், எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

நன்றி:News18

தொடர்புடைய செய்தி