2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பொது சின்னம் கோரி தவெக இன்று (நவ.11) தேர்தல் ஆணையத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகள் பொது சின்னம் கோரி இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில், டெல்லியில் முகாமிட்டுள்ள தவெக நிர்வாகிகள் மனு தாக்கல் செய்துள்ளனர். தவெக சார்பில் விசில், ஆட்டோ, சாம்பியன் கோப்பை உள்ளிட்ட 10 சின்னங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நன்றி:NewsTamil