திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே, சிறுத்தை பல் வைத்திருந்ததாக கூறி கேரள வனத்துறையினரால் மாரிமுத்து (48) என்பவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, கேரள வனத்துறையினர் மாரிமுத்துவை தமிழக வனத்துறையிடம் ஒப்படைத்துள்ளனர். விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில், கழிப்பறைக்குள் சென்ற மாரிமுத்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தமிழக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து கோட்டாட்சியர் மற்றும் வனச்சரக அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி:பாலிமர் நியூஸ்