மேகதாது அணை கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக வரும் செய்தி உண்மை இல்லை என நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து பேசிய அவர், "மேகதாது அணை கட்டுவதை 4 ஆண்டுகளாக தடுத்து நிறுத்தியதுபோல், இனி வரும் காலத்திலுல் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். காவிரி மேலாண்மை ஆணையத்திடமும் மத்திய நீர்வள குழுமத்திடமும் தமிழ்நாடு அரசு தனது வலுவான வாதங்களை முன்வைக்க உள்ளது" என கூறினார்.
நன்றி: நியூஸ் தமிழ்