பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் சாலை உலா திட்டத்திற்கு நெல்லை காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. நாளை (அக்.7) நெல்லை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஊசி கோபுரம் அருகே சாலை உலா நடத்த பாமக சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது. ஆனால், சட்டம்-ஒழுங்கு மற்றும் போக்குவரத்து பிரச்னைகளை கருத்தில் கொண்டு, இந்த பேரணிக்கு அனுமதி வழங்க காவல்துறை மறுப்பு தெரிவித்துள்ளது. இதன் மூலம், அன்புமணியின் சாலை உலா திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.