சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பேருந்து பணிமனையில் ஓட்டுநர் மற்றும் நடத்துனராக பணியாற்றி வரும் முரளி, தனது உடல்நலம் குன்றிய மகனைப் பராமரிப்பதற்காக கும்பகோணம் பணிமனைக்கு நிரந்தரமாக பணியிட மாற்றம் கோரி விண்ணப்பித்திருந்தார். இந்த விண்ணப்பம் நேற்று பரிசீலிக்கப்பட்டு, முதலமைச்சர் விஜய் அவர்களின் உடனடி உத்தரவின் பேரில், ஒரே நாளில் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. கும்பகோணம் பணிமனையில் பணியில் சேர்ந்த நாள் கணக்கிட்டு அவருக்கு பணிமூப்பு வழங்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.