மனித - வனவிலங்கு மோதலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு வெளியிட்டார். பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், 100 கிராமங்களில் மனித - வனவிலங்கு மோதல் தடுப்பு திட்டம் உருவாக்கப்படும். சூரிய மின்வேலி, எஃகு வேலி உள்ளிட்ட அறிவியல் சார்ந்த பாதுகாப்பு ஏற்படுத்தப்படும். வனப் பாதுகாப்பு பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். ஜிபிஎஸ் வசதியுடன் கண்காணிப்பு மற்றும் இரவு நேர ரோந்துப் பணிக்கு ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என அறிவித்தார்.