திருவெறும்பூர்: பெண்களிடம் அநாகரிகமாக பேசிய 4 பேர் கைது

திருவெறும்பூர் அருகே மது போதையில் பெண்களிடம் அநாகரிகமாக நடந்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். திருவெறும்பூர் அருகே வாழவந்தான் கோட்டை அண்ணா காலனியில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கிருந்து சமயபுரம் கோவிலுக்கு நேற்று (மார்ச் 25) வாகனத்தில் பூ ஏந்தி பெண்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சஞ்சீவி, சங்கர், மாதவன், மகா பாண்டியன் ஆகிய நான்கு பேர் மது போதையில் குங்குமப்புரம் பகுதியில் வாகனத்தை வழிமறித்தனர். 

அங்கு நடந்து சென்ற பெண்களை உரசியவாறு சென்றதோடு அவர்களை தகாத வார்த்தைகளால் சொல்லி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தட்டிக் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர்கள் அவர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் ஆறு பேர் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

இது குறித்து துவாக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் துவாக்குடி சப் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து சஞ்சீவி, மாதவன், மகா பாண்டியன், சங்கர் ஆகிய நான்கு பேரையும் கைது செய்து திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி