திருச்சியில் லாட்டரி சீட்டுகள் விற்ற அண்ணன் தம்பி கைது

திருச்சி தில்லை நகர் காந்திபுரம் புது காலனி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் போலீசார் அங்கு சோதனை செய்தபோது இரண்டு பேர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை ரசீதுகளில் எழுதி கொடுத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. 

இது குறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த அன்பரசன், அவருடைய தம்பி தென்னரசு ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய ரசீதுகள், இரண்டு செல்போன்கள் மற்றும் ஏழு லட்சத்து 32 ஆயிரத்து ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த மூர்த்தி, நெப்போலியன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி