பெரம்பலூர்: திருக்கோவிலில் ஊரணி திருவிழா

பெரம்பலூர் நகரில் உள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோவிலில் ஊரணி திருவிழா வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. இதில் மூலவர்களுக்கு பால், தயிர், சந்தனம், பழ வகைகளுடன், சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து பொங்கல் மாவிளக்கு படையலிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி