12-ம் திருவிழாவை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதையொட்டி உற்சவரான சந்திரசேகர சுவாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சலில் வைக்கப்பட்டு ஏகாந்த சேவை நடைபெற்றது.
இதையொட்டி மாவட்ட அரசு இசைப்பள்ளி தேவார ஆசிரியர் அரனாரை நடராஜன் மற்றும் தேவார குரலிசை பயிலும் மாணவ, மாணவிகளின் திருவாசக பாடல்கள் இசைக்கப்பட்டு சிவபுராணம் பாராயணம் நடைபெற்றது. திருவிழாவின் நிறைவாக இன்று மஞ்சள் நீர் விளையாட்டு நடைபெறுகிறது.