பெரம்பலூர்: "உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 15.07.2025 அன்று முதல் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சிறப்புடன் நடைபெற்று வருகிறது. அதன்படி, (30.07.2025) ஊரகப் பகுதிகளுக்கான முகாம் இரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், நகர்ப்புற பகுதிகளுக்கான முகாம் குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பங்காரு அம்மாள் நினைவு அரங்கத்திலும் நடைபெற்றது. 

இதில் குரும்பலூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் பார்வையிட்டு, பொதுமக்களிடம் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்தார். பின்னர், மனுக்கள் வழங்குவது தொடர்பான வழிகாட்டுதல்களை அலுவலர்கள் பொதுமக்களுக்கு வழங்கிடவும், அனைத்து மனுக்களுக்கும் விரைந்து தீர்வு ஏற்படுத்திட வேண்டும் என பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர், பொதுமக்களுக்கு வழங்கப்படும் அரசு துறைகளின் சேவைகள் தொடர்பாக முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்புடைய செய்தி