வாக்குச்சாவடிநிலை அலுவலர்களை பாராட்டிய வருவாய் கோட்டாட்சியர்

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய 7 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும், அவர்களுக்கான கண்காணிப்பாளருக்கும் இன்று (25.11.2025) வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் மு. அனிதா பொன்னாடை அணிவித்து பாராட்டினார். மாவட்ட தேர்தல் அலுவலர் மிருணாளினி அறிவுறுத்தலின் பேரில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது. அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் 100 சதவீத இலக்கினை எய்திட உதவி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி