பெரம்பலூர்: அரசு பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள் போராட்டம்

பெரம்பலூரில் இருந்து கிளியூர் வரை இயக்கப்படும் அரசுப் பேருந்து, கூடுதல் வழித்தடத்தில் செல்வதால் தாமதம் ஏற்படுவதாகப் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் பள்ளி, பணிக்குச் செல்ல குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை எனப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். பழைய வழித்தடத்தில் பேருந்தை இயக்கக் கோரி பெருமத்தூர் பொதுமக்கள் பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர்.

தொடர்புடைய செய்தி