பெரம்பலூர்: டாஸ்மாக் ஊழலை கண்டித்தும் பா. ஜ. க-வினர் சாலை மறியல்

தமிழகத்தில் டாஸ்மாக் ஊழலை சென்னை கண்டித்து டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை நேற்று (மார்ச்.17) முற்றுகையிட்ட சென்ற பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையை போலீசார் கைது செய்தனர். இதனை கண்டித்தும், டாஸ்மாக் ஊழலை கண்டித்தும் பெரம்பலூர் மாவட்ட பா.ஜனதாவினர் நேற்று பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் எதிரே உள்ள டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டனர். 

இதையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த பெரம்பலூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட பா.ஜனதாவை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 48 பேரை கைது செய்து வேனில் ஏற்றி அருகே உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர்

தொடர்புடைய செய்தி