பெரம்பலூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் மனோஜ் மற்றும் சிவனேசன் ஆகியோர் இணையவழி குற்றங்கள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஏடிஎம் கார்டு பயன்பாடு, ஓடிபி எண் பகிர்தல், வங்கி விவரங்களை யாருக்கும் கூறக்கூடாது, பண இழப்பு ஏற்பட்டால் 1930 என்ற உதவி எண்ணில் உடனடியாக தகவல் அளிப்பது, மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் செய்வது எப்படி என்பது குறித்து விளக்கப்பட்டது.