மேலும், அன்றைய தினம் ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட கொளக்காநத்தம் குறுவட்ட பகுதிக்கு கொளக்காநத்தம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும், கூத்தூர் குறுவட்ட பகுதிக்கு கூத்தூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் மற்றும் செட்டிக்குளம் குறுவட்ட பகுதிக்கு செட்டிக்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் சிறப்பு பட்டா மாறுதல் முகாம் நடைபெறவுள்ளது. "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தில் கிராம பொதுமக்கள் தங்கள் கிராமத்திற்கு ஆய்வுகள் மேற்கொள்ள வரும் மாவட்ட நிலை அலுவலரிடம் தங்களது கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை மற்றும் தங்கள் கிராமத்திற்கு தேவைப்படும் அடிப்படை வசதிகள் தொடர்பான கோரிக்கைகளையும் மனுக்களாக அளித்தும் மற்றும் பட்டா மாறுதல் சிறப்பு முகாமினை பயன்படுத்திக்கொள்ளுமாறும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி