பெரம்பலூர் மாவட்டத்தில், 72வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா 14.11.2025 முதல் 20.11.2025 வரை கொண்டாடப்படவுள்ளது. இதன் தொடக்க நாளான இன்று (14.11.2025) மாவட்ட ஆட்சியர் மிருணாளினி சங்குப்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் கூட்டுறவு கொடியினை ஏற்றி, கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடன் உறுதிமொழி எடுத்துக்கொண்டார். பின்னர் மரக்கன்றினையும் நட்டு வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.