தொட்டியம்: திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது.. 44 சவரன் பறிமுதல்

திருச்சி மாவட்டம், தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏலூர்பட்டி, மேய்க்கல் நாயக்கன்பட்டி, குளத்துப்பாளையம், முருங்கை ஆகிய ஊர்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வீடுகளில் பூட்டை உடைத்து திருடிச் சென்றவர்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். திருடிய நபர்களை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். 

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் வேட்டாம்பாடி, செல்லப்பா காலனியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் நாமக்கல் மாவட்டம் மோகனூர் பகுதியைசேர்ந்த அருண்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்ததில் இவர்கள் இருவரும் ஏலூர்பட்டி, மேய்க்கல் நாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாக காவல்துறைக்குத் தெரியவந்தது. மேலும் விசாரித்ததில் அவர்களிடமிருந்து 44 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் தொட்டியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி