இந்நிலையில், மாணவி உள்பட 14 மாணவிகளை கடந்த டிசம்பர் 25ஆம் தேதி உடற்பயிற்சி ஆசிரியர், கைப்பந்து போட்டியில் விளையாடுவதற்காக திருச்சி அழைத்துச் சென்றுள்ளார். டிசம்பர் 26ஆம் தேதி இரவு 9 மணிக்கு மாணவிகள் பள்ளிக்கு மீண்டும் திரும்பி வந்துள்ளனர். சம்பந்தப்பட்ட மாணவி தன்னை அழைக்க அப்பா வந்து விடுவார் எனக்கூறி பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறி தனது தந்தைக்காக காத்து நின்று உள்ளார். அந்த நேரத்தில் அங்கு வந்த பைசல் கான் (வயது 37) என்ற நபர் 'ஏன் இங்கு நிற்கிறாய்' எனக் கேட்டுள்ளார்.
அதற்கு 'பாத்ரூம் செல்ல வேண்டும்' என அந்த மாணவி கூறியுள்ளார். மாணவியை தனியாக அழைத்துச் சென்ற அந்த நபர் வலுக்கட்டாயமாக இழுத்து, அருகில் உள்ள ஒரு அறைக்குக் கொண்டு சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர், ஒரு கட்டத்தில் சிறுமி பலமாக கத்தியதால் வெளியே அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து பெற்றோர், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், மணலிக்கரையைச் சேர்ந்த பைசல் கானை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.