துறையூர் அருகே மூதாட்டி கொலை - பேரனுக்கு வலை வீச்சு

துறையூர் அருகேயுள்ள செங்காட்டுப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் நாகலட்சுமி(94). இவருடன் அவரது மருமகள் மகள் பானுமதி(70)யும், பேரன் முரளிராஜா(43)வும் வசித்தனர். முரளிராஜா வேலைக்கு செல்லாமல் ஊதாரித்தனமாக சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று(செப்.29) தன் தாயயிடம் செலவுக்கு பணம் தருமாறு முரளிராஜா தகராறு செய்தாராம்.

அப்போது அவரது பாட்டி நாகலட்சுமி பேரனை திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முரளிராஜா பாட்டியை இரும்புக் கம்பியால் தலையில் தாக்கியுள்ளார். இதில் சம்வப இடத்தில் மூதாட்டி உயிரிழந்தார். அதன்பின் அங்கிருந்து சென்றுள்ளார். உடனே பானுமதி காவல் கட்டுப்பாட்டு அறை 100க்கு தொடர்பு கொண்டு தகவல் கூறியுதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு துறையூர் போலீஸாரை அனுப்பினர்.

துறையூர் போலீஸார் மூதாட்டியின் சடலத்தை உடற்கூறாய்வு செய்வதற்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக துறையூர் போலீஸார் வழக்குப் பதிந்து முரளிராஜாவைத் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி