முசிறி அருகே உள்ள பாலசமுத்திரம் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். சம்பவம் நடந்த நேற்று அவர் தனது இரு சக்கர வாகனத்தில் மகேந்திரமங்கலம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து இவருடைய இரு சக்கர வாகனத்தை மோதியதில் விபத்துக்குள்ளானார். முகம், தலை மற்றும் வலது கால் பகுதியில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த தொட்டியம் போலீசார் விஜயகுமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முசிறி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.