மதுபழக்கம் - தந்தை கண்டித்ததால் மகன் தற்கொலை

லால்குடி அருகே உள்ள புதூர் உத்தமனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர், கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்ததால் அவருடைய தந்தை ராஜரத்தினம் அவரைக் கண்டித்துள்ளார்.

இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் கடந்த ஒன்றாம் தேதி அன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்த அலெக்சாண்டர் நேற்று (அக் 3) உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காணகிளியநல்லூர் காவல் நிலைய போலீசார் விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி