பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, கிராம உதவியாளர்கள் சங்கம் நான்காம் நிலை D - கிரேடு ஊதியம் வழங்க கோரி ஐந்தாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், இன்று மதியம் பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, போலீசார் மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து அழைத்துச் சென்றனர்.