மேலும், கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் மக்கள் நல்வாழ்வு மையத்திற்கு வர இயலாத சூழ்நிலையில் உள்ள நோயாளிகளுக்கு வீட்டிற்கே சென்று மருத்துவ உதவிகளையும், உரிய மருத்துவ வழிகாட்டுதலையும் வழங்கிட மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, சிறுவாச்சூர் கால்நடை மருந்தகத்தை பார்வையிட்ட ஆட்சியர், கால்நடைகளுக்கு வழங்கப்படும் சேவைகள், கோமாரி நோய் தடுப்பு முறைகள், மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நலத்திட்டங்கள், கால்நடைகள், செல்லப் பிராணிகளுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். பாடாலூர் கால்நடை மருந்தக கட்டடத்தில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.