பெரம்பலூர்: வாலீஸ்வரர் திருக்கோயிலில் வைகாசி விஷாக விழா

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வாலிகண்டபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது வாலாம்பிகா சமேத வாலீஸ்வரர் திருக்கோவில். ஆயிரம் ஆண்டுகள் பழமையான, புராதான பிரசித்தி பெற்ற இத்திருக்கோவிலில் வடக்கு பார்த்த நிலையில் 7 அடி உயரத்தில் பால தண்டாயுதபாணி சுவாமி வீற்றிருக்கிறார். 

இதனிடையே முருகனுக்கு உகந்த நட்சத்திரமான வைகாசி விசாக நட்சத்திர சிறப்பு மகா அபிஷேகம் சிறப்பு பூஜைகள் இன்று நடைபெற்றது. பால தண்டாயுதபாணி சுவாமிக்கு பல்வேறு அபிஷேக திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரத்தோடு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அரோகரா முழக்கத்தோடு தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி