பெரம்பலூர் அருகே லாரிகள் மோதல்.. ஓட்டுநர் உயிரிழப்பு

பெரம்பலூர் மாவட்டம், ஆய்க்குடி கிராமத்திலிருந்து மக்காச்சோள மூட்டைகளுடன் நாமக்கல் சென்ற லாரி, திருச்சி மாவட்டம், துறையூா் அருகே திங்கள்கிழமை இரவு விபத்துக்குள்ளானது. கரூா் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு கிரானைட் கற்களை ஏற்றிச்சென்ற லாரி நேருக்கு நேர் மோதியதில், கிரானைட் லாரி ஓட்டுநர் முத்துசாமி (57) உயிரிழந்தார். மக்காச்சோள லாரி ஓட்டுநர் நரசிம்மன் (42) காயமடைந்து துறையூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் ஊரகப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி