பெரம்பலூர்: TNPSC GROUP - I பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2025 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் TNPSC GROUP – I தேர்விற்கான அறிவிக்கை வெளியிடப்பட உள்ளது. துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் போன்ற பல்வேறு பணிகளுக்கு அறிக்கை வெளியிடப்பட உள்ளது. 

ஜூன் – 15ம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு ஆகும். மேலும், விவரங்களை https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். தற்போது TNPSC GROUP - I தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்பவழிகாட்டல் மையத்தில் 26.03.2025 முதல் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வேலைநாடுநர்கள் பயன்பெறும் பொருட்டு இப்போட்டித் தேர்விற்காக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. 

போட்டித்தேர்வர்களுக்கு தேவையான அனைத்து சமச்சீர் மற்றும் பாடப்புத்தகங்களுடன் கூடிய நூலக வசதி, வாராந்திர மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். பாடத்திட்டத்தின்படி வகுப்புகள் எடுக்கப்படும். இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்பும் போட்டித் தேர்வு ஆர்வலர்கள் நேரிலோ அல்லது 94990 55913 என்ற பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்பவழிகாட்டல் மைய தொலைபேசி எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி