பெரம்பலூர்: வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது

பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட அனுக்கூர் குடிக்காட்டைச் சேர்ந்த கொளஞ்சி மகன் பாஸ்கர் (34) என்பவர் லோடு ஆட்டோவில் வைத்து பூண்டு வியாபாரம் செய்து வருவதாகவும் 14.02.2025-ம் தேதி இரவு 10.30 மணிக்கு வடக்குமாதவி ரேசன் கடை அருகே தனது ஆட்டோவில் பாஸ்கரும் அவரது மாமன் மகனும் வந்து கொண்டிருந்த போது தங்களை வழிமறித்து 3 நபர்கள் கத்தியை காட்டி தன்னிடம் இருந்த 2000 ரூபாயை வழிப்பறி செய்ததாக பெரம்பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில் இந்த வழக்கினை பெரம்பலூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் பிச்சைமணி தலைமையிலான குழுவினர் விசாரனை செய்ததில் இந்த வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பெரம்பலூர் சங்குபேட்டையைச் சேர்ந்த சாகுல் குமார் (21) வடக்கு மாதவியைச் சேர்ந்த மகேந்திரன் (25) அனுக்கூர் குடிக்காட்டைச் சேர்ந்த கலையரசன் (18) ஆகியோர்கள் என்பது தெரியவந்தது. குற்றவாளிகள் மீது வழக்குப்பதிவு செய்து இன்று குற்றவாளிகள் மூவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி