பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில், மத்திய பா.ஜ.க. மோடி அரசைக் கண்டித்து, குன்னம், கலைஞர் திடலில் கண்டன பொதுக்கூட்டம் 8.2.2025 நடைபெற்றது. வேப்பூர் ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொழில்நுட்ப அணி மாநில ஆலோசகர் கோவி. லெனின் - மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் புதுக்கோட்டை விஜயா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்கள்.
இதில் எம்.எல்.ஏ பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் துரைசாமி, முன்னாள் மாவட்டக் கழகச் செயலாளர் குன்னம் இராஜேந்திரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.