பெரம்பலூர்: விடுதியில் தங்கி பயில மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் விடுதியில் மாணவர், மாணவியர்கள் தங்கி கல்வி பயில விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிகாப்பாளர்/ காப்பாளினிகளிடமிருந்தோ (அ) மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளைப் பொறுத்தவரை 18.06.2025-க்குள்ளும், கல்லூரி விடுதிகளைப் பொறுத்தவரை 15.07.2025-க்குள்ளும், சமர்ப்பிக்க வேண்டும். எனவே, பள்ளி, கல்லூரி பயிலும் மாணவர்கள் விடுதியில் தங்கி கல்வி பயின்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி