பெரம்பலூர்: தெருநாய்கள் தொல்லை.. பொதுமக்கள் கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூர் பாளையத்தில் தெருநாய்களின் தொந்தரவு அதிகரித்துள்ளது. சாலைகளில் கும்பலாக திரியும் நாய்கள் பொதுமக்களை துரத்துவது, வாகனங்களில் விழுவது, குழந்தைகளையும் வயதானவர்களையும் அச்சுறுத்துவது என அன்றாட நிகழ்வாகிவிட்டது. இதனால் அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்த தெருநாய்களின் தொல்லையிலிருந்து பொதுமக்களைக் காத்து, அவர்களின் அச்சத்தைப் போக்க குரும்பலூர் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாளையம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி