கோயில் முன்பு அமைக்கப்பட்ட யாகசாலையில் முதல் கால யாக பூஜை மங்கள இசையுடன் நேற்று முன்தினம் மாலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று மூன்று கால பூஜைக்கு பின்னர் இன்று காலை மகா வேள்வி நடைபெற்று பூர்ணாஹுதியுடன் பூஜைகள் முடிந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயில் கோபுரம் கொண்டுவரப்பட்டு அங்கு கலசங்களுக்கு சிறப்பு பூஜை செய்து, புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலும் 24 அடி உயரம் உள்ள முருகன் சிலை மீதும் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அருகே உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகா, முருகா என்ற முழக்கமிட்டு, பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மீதும் புனிதநீர் தெளிக்கப்பட்டது.