பெரம்பலூர்: வருவாய்த்துறை அலுவலர்களுடான ஆய்வு கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்ற நிலை தொடர்பாக வருவாய்த்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று (18.03.2024) நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு வட்டங்களில் பணியாற்றும் வட்டாட்சியர்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சார் ஆட்சியர் அலுவலகங்களில் பணியாற்றும் வருவாய்த்துறை அலுவலர்களின் பணிகளின் முன்னேற்ற நிலை தொடர்பாக விரிவாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி