பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், வாக்காளர்களுக்கு 4.11.2025 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி அதை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறித்து விளக்கமளித்தனர். பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை அலுவலர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றும் பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. கணக்கீட்டுபடிவங்களை பூர்த்தி செய்ய இயலாத வாக்காளர்களுக்கு தன்னார்வலர்கள் மூலமாக கண்கெடுப்பு படிவம் பூர்த்தி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குன்னம் வட்டத்தில் 23.11.2025 மற்றும் 24.11.2025 தேதியில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் படிவங்களை பூர்த்தி செய்வது தொடர்பாக உதவி மையம் செயல்படுத்தப்பட உள்ளது. 19.11.2025 அன்று குன்னத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் அமைக்கப்பட்ட உதவி மையத்தினை குன்னம் சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.