மக்கள் தொடர்பு திட்டம் முகாம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், எழுமூர்(கிழக்கு) கிராமத்தில், எதிர்வரும் 14. 08. 2024 (புதன்கிழமை) அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ், இ. ஆ. ப. , தலைமையில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நடைபெற உள்ளது.

மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், குன்னம் வட்டத்திற்குட்பட்ட எழுமூர் (கிழக்கு) கிராமத்தில் மக்கள் தொடர்புத் திட்ட முகாம் 14. 08. 2024 (புதன்கிழமை) அன்று நடைபெறவுள்ளது.

அதற்காக பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. எனவே, எழுமூர்(கிழக்கு) மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக எழுமூர்(கிழக்கு) கிராம நிர்வாக அலுவலகத்தில், கோரிக்கை மனுக்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புடைய செய்தி