இவ்வேலைவாய்ப்பு முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள எம்.ஆர்.எப் நிறுவனம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு 8-ஆம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐடிஐ, மற்றும் டிப்ளமோ, அக்ரி, நர்சிங், பார்மசி, பி.இ, பி.டெக், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ஓட்டுநர், டெய்லர் மற்றும் ஆசிரியர் கல்வித்தகுதியுடையோர்களை தேர்வு செய்யவுள்ளனர்.
இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் பயோடேட்டா, கல்விச்சான்றிதழ்களுடன் 08.03.2025 பெரம்பலூர் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் http://www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் Candidate Login–ல் தங்களது விவரங்கள் பதிவு செய்துக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 9499055913 என்ற எண்ணைத் தொடர்புகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.