தேனூர் துணைமின் நிலையத்தில் நாளை (14.11.2025) காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், பணிகள் முடியும் வரை புதுவேட்டக்குடி, காடூர், நமங்குணம், கீழப்பெரம்பலூர், கோவில்பாளையம், துங்கபுரம், குழுமூர், மாத்தூர், நல்லூர், அங்கனூர், அகரம்சீகூர், வயலூர், வயலப்பாடி, கிளியப்பட்டு, கரப்பட்டாங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும் என உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.