பெரம்பலூரில் போக்சோ வழக்கு: கடுங்காவல் சிறை தண்டனை

பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கிராமத்தில் சிறுமியை பாலியல் தொந்தரவு செய்ததாக மோகன் (36) என்பவர் மீது அரும்பாவூர் காவல் நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு போக்சோ வழக்குப் பதிவுசெய்யப்பட்டு குற்றவாளியைக் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இவ்வழக்கின் விசாரணை முடித்து குற்ற இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 

இதன்படி மாவட்ட மகிளா நீதிமன்ற விசாரணையில் இருந்த இந்த வழக்கில் ஜூன் 6ஆம் தேதி குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி என உறுதி செய்த நீதிமன்றம் நேற்று (ஜூன் 9) மோகன் என்பவருக்கு 4மொத்தம் 32 வருடம் சிறை தண்டனை மற்றும் 1,01,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி இந்திராணி உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி