பெரம்பலூர்: தங்கள் பகுதியை நகராட்சியுடன் இணைக்க கூடாது.. ஆட்சியரிடம் மனு

பெரம்பலூர் நகராட்சியுடன் எளம்பலூர், கோனேரிப்பாளையம் ஆகிய ஊராட்சிகள் முழுமையாகவும், கவுள்பாளையம், நெடுவாசல் ஆகிய ஊராட்சிகளின் ஒரு பகுதியும் இணைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை நகராட்சியுடன் இணைத்தால் தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை கிடைக்காது என்று கூறி பொதுமக்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி எளம்பலூர் ஊராட்சிக்கு உட்பட்ட எம். ஜி. ஆர் நகர் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று (ஜனவரி 20) மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். ஆட்சியர் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி