இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட பொருளாளர் அறிவழகன் மற்றும் பசும்பலூரை சேர்ந்த பாண்டியன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (செப்.30) மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் தெரிவித்த போது பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பசும்பலூர் வடக்கு பகுதியில் உள்ள ஓடைப்பகுதியில் அருகே உள்ள நிலத்தின் உரிமையாளர் அப்பகுதியில் உள்ள ஓடையை ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பதால் இன்று (செப்.30) மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்திருப்பதாகவும் இதன் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலத்தை மீட்க வேண்டும் மேலும் இதற்கு உறுதுணையாக இருந்த விஏஓ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்திய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் விஏஓ அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளனர்.