பெரம்பலூர் மாவட்டம், மாவிலங்கை கிராமத்தில் சொத்து தகராறில் ஏற்பட்ட முன்விரோதத்தால் தாய் மல்லிகா (43), மகள் கீர்த்தனா (21) விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இது தொடர்பாக கை.களத்தூர் போலீசார் சாந்தாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் புதன்கிழமை உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, மல்லிகாவின் உறவினர்கள் சீராளன் என்பவரையும் கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.