பாடாலூரில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் பாடாலூர் டாஸ்மாக் கடை அருகே சட்டவிரோதமாக மதுபானம் விற்ற உமேஷ் (36) என்பவர் கைது செய்யப்பட்டார். அரசு டாஸ்மாக் கடையில் மதுபானங்களை வாங்கி வந்து சட்டவிரோதமாக விற்றது விசாரணையில் தெரியவந்தது. அவரிடம் இருந்து 40 மதுபுட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசில் ஒப்படைக்கப்பட்டார். உமேஷ் ஆலத்தூர் ஒன்றிய தவெக செயற்குழு உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது.