பெரம்பலூர் மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய செப்டம்பர் 26 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் மிருணாளினி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை. பிறப்பு சான்றிதழ் சட்டப்பூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார். குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்து இலவச பிறப்புச் சான்றிதழ் பெற சட்டம் வழிவகை செய்கிறது. பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்தால் மட்டுமே அது முழுமையானதாகக் கருதப்படுகிறது.