பெரம்பலூர்: திமுக - விசிக மோதல்.. திருமாவளவன் வேதனை

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன்: பெரம்பலூர் குன்னத்தில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் கவலை அளிக்கிறது. இந்த நிகழ்வுகள் வேதனையளிக்கிறது. விடுதலை சிறுத்தைகள் சமூக ஊடகத்தில் வரும் அவதூறுகளுக்கு  எதிர்வினை ஆற்றவேண்டாம் என்பதை கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற ஆர்பாட்டம் நடைபெறும் என்பதை கேள்விபட்டு தவிர்க்க வேண்டும் என்று கூறி இருந்தேன். தகவல் அறியாத தோழர்கள் கூடியிருக்கிறார்கள் இனி அவ்வாறு நடப்பதற்கு இயக்க தோழர்கள் யாரும் இடம் கொடுத்துவிடக்கூடாது. இவ்வாறு பேசினார்.

தொடர்புடைய செய்தி