மேலும், கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைப்பியல் துறை, இயந்திரவியல் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை, மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை, கணிப்பொறியியல் துறை ஆகிய தொழில்நுட்பக் கல்வி பாடப்பிரிவுகள் உள்ளன. கீழக்கணவாய் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் தரமான கல்வி மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள், ஸ்மார்ட் வகுப்பறை வசதி, அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், மாணவர்களுக்கு அரசு இலவச விடுதி, மாணவியர்களுக்கு கல்லூரிக்கு எதிரில் அரசு இலவச விடுதி, இருபாலருக்கும் அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
மாணவர் சேர்க்கை மற்றும் இணைய வழியில் விண்ணப்பிப்பது தொடர்பாக விவரங்கள் அறிய அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, கீழக்கணவாய், பெரம்பலூர் - 621 104 நேரிலோ அல்லது 04328-243200, 243100, 99765 77570, 96266 52336, 90037 94703, 93613 57035 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.