பெரம்பலூர்: மூதாட்டியிடம் செயின் பறிப்பு.. போலீஸ் வலை

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் திங்கள்கிழமை மாத்திரைகள் வாங்க வந்த செஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி லட்சுமி (76)யிடம், முதியோர் உதவித்தொகை வாங்கித் தருவதாகக் கூறி, அவர் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற அடையாளம் தெரியாத நபரை போலீஸார் தேடி வருகின்றனர். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட லட்சுமி, மருத்துவமனையில் வரிசையில் நின்றபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி